செல்லாத ரூபாய் நோட்டுகள் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது ரிசர்வ் வங்கி கவர்னர்
செல்லாத ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி,
சமாஜ்வாதி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் 2 பேர் பண மதிப்பிழப்பிற்கு பின் எவ்வளவு பழைய ரூ 500, ரூ1,000 நோட்டுக்கள் வந்துள்ளது என பாராளுமன்ற குழு சார்பில் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதற்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கூறியதாவது:
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் செல்லாத ரூ.500 ரூ1,000 நோட்டுக்கள் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி தொடர்ந்து 24 மணி நேரமும் நடந்து வருகிறது. பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி செய்பவர்களுக்கு ஞாயிறு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
கடந்த நவம்பரில் மொத்தம் 17.7 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. பிரதமர் மோடியின் கருப்பு பணம் ஒழிப்பிற்கு பிறகு தற்போது 15.4 லட்சம் கோடி ரூபாய் பணம் புழக்கத்தில் உள்ளது. நேபால், மற்றும் கோ ஆப்ரேட்டிவ் வங்கிகளில் இருந்து பழைய ரூபாய் நோட்டுகள் வர வேண்டி உள்ளது. தபால் நிலையங்களில் பொதுமக்கள் மாற்றிய ரூபாய் நோட்டுகள் இன்னும் ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்ய வில்லை.
இவ்வாறு உர்ஜித் படேல் கூறினார்.
Related Tags :
Next Story