அரசு மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
அரசு மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
புதுடெல்லி,
ஆளும் அரசு மீது சொந்த நாட்டு மக்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கும் நாடுகளின் பட்டியலை பிரபல நாளிதழான போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 73 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 73 சதவீத மக்கள் அரசாங்கம் மீது அதிக நம்பிக்கையை கொண்டிருப்பதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக 62 சதவீதத்துடன் கனடா இரண்டாம் இடம் வகிக்கிறது. 58 சதவீதத்துடன் துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகள் முறையே மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. வல்லரசு நாடான அமெரிக்கா மீது அதன் சொந்த நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையானது 30 சதவீதம் அளவுக்கே உள்ளது. அமெரிக்கா இந்த பட்டியலில் 10 வது இடம் வகிக்கிறது. 13 சதவீதத்துடன் இந்த பட்டியலில் கிரீஸ் கடைசி இடம் வகிக்கிறது.
Related Tags :
Next Story