இரட்டை இலைக்கு லஞ்சம் தினகரன் வழக்கில் ‘திடீர்’ திருப்பம் குற்றப் பத்திரிக்கையில் பெயர் இல்லை
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு குற்றப் பத்திரிக்கையில் தினகரன் பெயர் இடம் பெறவில்லை.
புதுடெல்லி,
அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது டெல்லி போலீசார் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்தனர்.
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தேர்தல் கமிஷன் அதிகாரிக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி. தினகரன் இடையேயான டெலிபோன் உரையாடல் ஆதாரத்தை டெல்லி போலீசாரால் நிரூபிக்க முடியவில்லை. மேலும் லஞ்சம் பெற முயன்ற தேர்தல் கமிஷன் அதிகாரி யார் என்பதையும் தெரிவிக்க முடியவில்லை.
இந்த காரணங்களால் டெல்லி கோர்ட்டு டி.டி.வி. தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவரை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து டி.டி.வி. தினகரன் 69 நாட்கள் சிறை வாசத்துக்கு பின்பு ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை டெல்லி கோர்ட்டில் போலீசார் இன்று தாக்கல் செய்தனர். அதில் சுகேஷ் சந்திரசேகர் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில் டி.டி.வி. தினகரன் பெயர் இடம் பெறவில்லை.
அவர் மீதான புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை என்பதால் டெல்லி போலீசார் தினகரன் பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை என்று தெரிய வருகிறது. இதன் மூலம் இந்த வழக்கில் இருந்து தினகரன் விடுவிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தினகரனுக்கு கிடைத்த நிவாரணமாக கருதப்படுகிறது.

Related Tags :
Next Story