தாம்பரம் - மதுராந்தகம் இடையே பறக்கும் சாலை - அமைச்சர் அறிவிப்பு
தாம்பரம் - மதுராந்தகம் இடையே பறக்கும் சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை
ஏற்கனவே சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் இடையேயுள்ள பறக்கும் சாலை திட்டம் நிறுத்திவைக்கப்பட்டு சமீபத்தில்தான் மீண்டும் கட்டப்படும் என்ற அறிவிப்பு வந்திருந்தது. இத்திட்டம் ரூ. 1815 செலவில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதன் மூலம் 17 கி.மீட்டர் தூரத்தை 15 நிமிடங்களில் கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டும்.
இப்போது பறக்கும் சாலை மதுராந்தகம் வரை நீட்டிக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது. சென்னை விமான நிலையம் - செங்கல்பட்டு பறக்கும் சாலை திட்டம், தாம்பரம்-செங்கல்பட்டு பறக்கும் சாலை திட்டம் ஆகிய இரண்டும் அறிவிக்கப்பட்டு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 45 இல் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இத்திட்டங்கள் உதவும் என்று கருதப்படுகிறது.
Related Tags :
Next Story