பத்மநாபசாமி கோவிலில் கேமரா, செல்போன் மூலம் படம் பிடித்த பெண்கள் உள்பட 7 பேர் கைது
பத்மநாபசாமி கோவிலின் உள்ளே கேமரா மற்றும் செல்போன் ஆகியவற்றை எடுத்து வந்து படம் பிடித்த பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ரகசிய அறைகளில் பொற்குவியல்கள் நிறைந்துள்ளன. எனவே கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீசாரும், கமாண்டோ படையினரும் இந்த பாதுகாப்பு பணியினை செய்து வருகிறார்கள்.
கோவிலின் நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு பக்தர்களிடம் சோதனை நடத்தப்படுகிறது. ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. கோவிலுக்குள் செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த 7 பக்தர்கள் தரிசனத்துக்காக கோவிலுக்குள் சென்றனர். அதில் 5 பேர் பெண்கள். அவர்கள் செல்போன் மற்றும் கேமரா மூலம் கோவிலின் உள்ளே படம் பிடிக்க முயன்றுள்ளனர். அவர்களை கோவில் ஊழியர்கள் தடுத்து கோவிலில் படம் எடுக்க அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி அந்த பக்தர்கள் புகைப்படம் பிடித்ததை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து 7 பேரையும் கைது செய்தனர்.
தீவிர சோதனை, பலத்த பாதுகாப்பையும் தாண்டி அவர்கள் கோவிலின் உள்ளே கேமரா மற்றும் செல்போன்களை எடுத்து வந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் கோவிலில் பாதுகாப்பு குளறுபடி ஏதேனும் உள்ளதா? என்பது பற்றி போலீஸ் உயர் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story