கனடிய இந்தியர் யூனிசெஃப் நல் எண்ண தூதுவராக நியமனம்
கனடா நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான லில்லி சிங் யூனிசெஃப் அமைப்பின் நல் எண்ண தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி
லில்லி சிங் டெல்லியில் முகாமிட்டு யுனிசெஃப்பின் யூத் ஃபார் சேஞ்ச் எனும் முயற்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இம்முயற்சி உடல்நலம், சுகாதாரம், சிறார் தொழிலாளர் மற்றும் பாலியல் சமத்துவம் ஆகியவற்றின் தொடர்பில் இயங்கி வருகிறது. “குழந்தைகளின் நலனுக்கு ஆதரவளிக்க எனது குரலை அளிக்க கிடைத்த வாய்ப்பினால் கௌரவிக்கப்படுகிறேன். சமூகத்திற்காக அல்லாமல் சிறார்களுக்காக குரல் கொடுப்பதற்கான நேரம்” என்றார் லில்லி.
யூ டியூப் வட்டாரத்தில் பிரபல நட்சத்திரமான இவர் ஹிந்தியில் சில காணொலிகளை வெளியிட்டும், அதே போல ஆங்கில காணொலிகளில் ஹிந்தி சப்-டைட்டில்களை இடுவதன் மூலம் தனது வலைப்பதிவும், சேனலும் ஏராளமானவர்களை சென்றடைய செய்யப்போவதாக கூறினார்.
யூ டியூப்பில் 11.9 மில்லியன் சந்தாதாரர்களை வைத்துள்ள இவர் இந்த ஐநா அமைப்பின் பணிகளை விளக்கி தன்னைப் பின் தொடர்பவர்களை குழந்தைகளின் நலனுக்கு வேலை செய்ய வலியுறுத்தவுள்ளார்.
லில்லி சிங்கிற்கு 28 வயதாகிறது. யூ டியூப்பில் ‘சூப்பர் உமன்’ எனும் பெயரைப் பெற்றவர். ஓரு புதிய முயற்சியாக சமூக வலைதளங்களில் #பெண் குழந்தைகளின் மீது அன்பு எனும் ஹேஷ்டேக்கில் பெண் குழந்தைகளின் மீதான வெறுப்பை தடுத்து நிறுத்தும் நோக்கோடு பிரச்சாரத்தை துவங்கியிருக்கிறார்.
Related Tags :
Next Story