காஷ்மீரில் அமைதிச் சூழலை உருவாக்க நவாஸ் ஷெரீஃபிற்கு டெல்லி இமாம் கடிதம்
டெல்லியிலுள்ள ஜாமா மஸ்ஜித்தின் ஷாஹி இமாம் சையத் அகமத் புஹாரி காஷ்மீரில் அமைதியான சூழலை உருவாக்கும்படி கோரி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி
”காஷ்மீர் சூழல் நாளுக்கு நாள் நிலையற்றதாக ஆகி வருகிறது. அதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றத்தை ஏற்படுத்துகிறது. பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஏற்ப சூழ்நிலையை உருவாக்க இப்போது தவறினால் காஷ்மீர் விவகாரத்தை தீர்ப்பது மேலும் சிக்கலாகிவிடும்” என்றார் புஹாரி.
“ஒரு காலத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு என்று அறியப்பட்ட இடம் இன்று கண்ணீரின் பள்ளத்தாக்கு என்ற நிலையை அடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் ஏகே-47 துப்பாக்கியின் முனை நிழலில் வாழ்கின்றனர்” என்று கடிதத்தில் புஹாரி குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் பிரச்சினையை துப்பாக்கி முனையிலோ, கல் அடியாலோ அல்லது ராணுவ நடவடிக்கைகளாலோ தீர்த்து விட முடியாது. “நாம் பேச்சு வார்த்தைக்கு ஏற்ற சூழலை விரைவில் ஏற்படுத்த வேண்டும். உங்களது பதவியை பயன்படுத்தி தீவிரவாதத் தலைவர்கள், ஹரியத் தலைவர்கள் ஆகியோர் போர் நிறுத்தத்திற்கு உடன்பட வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றும் புஹாரி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story