அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மீரா குமார் சந்திப்பு
எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் மீரா குமார் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று சந்தித்துள்ளார்.
புது டெல்லி
ஆம் ஆத்மி கட்சி மீரா குமாருக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார். கட்சியின் அரசியல் விவகாரக்குழுவின் தீர்மானத்தின்படி ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
என்றாலும் ஆம் ஆத்மி கட்சியை 18 எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைக்கவில்லை. இச்சூழ்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் மீரா குமார் அவரை சந்தித்துள்ளார். இருவரும் இந்த சந்திப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதை இருவரும் தங்களது டிவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளனர்.
தற்போது டெல்லி சட்டசபையில் 64 உறுப்பினர்களை ஆம் ஆத்மி கட்சி வைத்துள்ளது.
ஆம் ஆத்மியின் ஆதரவு துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலிலும் தொடருமா என்பது தெரியவில்லை.
Related Tags :
Next Story