பாகிஸ்தான் ராணுவ துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர், சிறுமி உயிரிழப்பு; டிஜிஎம்ஓ அளவில் பேச்சுவார்த்தை


பாகிஸ்தான் ராணுவ துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர், சிறுமி உயிரிழப்பு; டிஜிஎம்ஓ அளவில் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 17 July 2017 12:50 PM IST (Updated: 17 July 2017 12:50 PM IST)
t-max-icont-min-icon

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அடாவடி துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் மற்றும் 9 வயது சிறுமி உயிரிழந்தனர்.


ஸ்ரீநகர்,
 
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாலாகோட், மாஞ்சாகோட் மற்றும் பிம்பெர் காலி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்தது. பிம்பெர் காலி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் கிராமவாசிகளை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 9 வயது சிறுமி சாஜிதா காபீல் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பாலாகோட் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்து உள்ளார். 

ராஜோரி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அடாவடி தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் நாய்க் முத்தாசார் அகமது உயிரிழந்தார். அகமது ஜம்மு காஷ்மீரின் திரால் பகுதியை சேர்ந்தவர் என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. 

பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதை தொடர்ந்து இருநாட்டு டிஜிஎம்ஓ அளவிலான பேச்சுவார்த்தனையானது நடந்து உள்ளது. ராணுவ செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குநர்கள் தலைமையிலான பேச்சுவார்த்தை தொலைபேசி வாயிலாக நடந்து உள்ளது. எல்லை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா எல்லையில் அமைதியை விரும்பும் நிலையில் பாகிஸ்தான் அடாவடியாக தாக்குதலை எப்போதும் தொடர்கிறது. 

இந்தியா சரமாரியாக பதிலடி கொடுத்ததும் அமைதியாகிறது. இப்போதும் அடாவடியை தொடங்கி உள்ளது பாகிஸ்தான் ராணுவம். 

4 பாக். வீரர்கள் உயிரிழப்பு

இதற்கிடையே இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்துவிட்டனர் என பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது.

இந்திய ராணுவ தாக்குதலில் சிக்கிய எங்களது ராணுவ வாகனம் நீலம் ஆற்றில் விழுந்துவிட்டது என கூறிஉள்ளது பாகிஸ்தான். ஒரு ராணுவ வீரரின் சடலம் மீட்கப்பட்டதாகவும், மூன்று ராணுவ வீரரின் சடலத்தை தேடி வருவதாகவும் பாகிஸ்தான் கூறிஉள்ளது.


Next Story