மாட்டிறைச்சி எடுத்து சென்றதாக கும்பலால் தாக்கப்பட்ட பா.ஜனதா உறுப்பினர் கைது


மாட்டிறைச்சி எடுத்து சென்றதாக கும்பலால் தாக்கப்பட்ட பா.ஜனதா உறுப்பினர் கைது
x
தினத்தந்தி 17 July 2017 1:43 PM IST (Updated: 17 July 2017 1:43 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் மாட்டிறைச்சியை எடுத்து சென்றதாக கும்பலால் தாக்கப்பட்ட பா.ஜனதா உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.

நாக்பூர்,

நாக்பூர் மாவட்டம் கடோல் பகுதியை சேர்ந்த பாரதீய ஜனதா உறுப்பினர் சலீம் இஸ்மாயில் (வயது 31) மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக சந்தேகத்தின்பேரில், 4 பேர் கும்பலால் சமீபத்தில் தாக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக இஸ்மாயிலை தாக்கிய அஸ்வின் (35), ராமேஸ்வர் (42), மோரேஷ்வர் (36) மற்றும் ஜெகதீஷ் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சலீம் இஸ்மாயிலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி, தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில், அது மாட்டு இறைச்சி என்பது உறுதியானது. இதுபற்றி சலீம் இஸ்மாயிலின் குடும்பத்தினரிடம் கேட்டதற்கு, பையில் இருந்த கறி பற்றி அவருக்கு ஏதும் தெரியாது என்றனர். 

இதனிடையே, சலீம் இஸ்மாயிலை கட்சியில் இருந்து நீக்கப்போவதாக நாக்பூர் பிரிவு பா.ஜனதா தலைவர் ராஜீவ் போதார் தெரிவித்தார்.

இப்போது சென்றதாக கும்பலால் தாக்கப்பட்ட பா.ஜனதா உறுப்பினர் இஸ்மாயிலை போலீஸ் கைது செய்து உள்ளது. இஸ்மாயிலை கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளதாக போலீஸ் தெரிவித்து உள்ளது. மாநில அரசின் சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மராட்டியத்தில் ஆட்சிக்கு வந்ததும் பா.ஜனதா தலைமையிலான அரசு மாட்டிறைச்சி தடை சட்டத்தை கொண்டு வந்தது. 

Next Story