கோவா: சமூக ஆர்வலருக்கு எதிராக உரிமை மீறல் புகார்


கோவா: சமூக ஆர்வலருக்கு எதிராக உரிமை மீறல் புகார்
x
தினத்தந்தி 18 July 2017 1:37 AM IST (Updated: 18 July 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

சமூக ஆர்வலருக்கு எதிராக பாஜக பேரவை உறுப்பினர் ஒருவர் உரிமை மீறல் புகார் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

பனாஜி

நிலேஷ் கப்ரால் எனும் ஆளுங்கட்சி உறுப்பினர் காசிநாத் ஷெட்யே எனும் சமூக ஆர்வலர் மீது இப்புகாரை கொடுத்துள்ளார்.  காசிநாத் தான் பேரவையில் கேட்க வேண்டிய கேள்வியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதே கப்ராலின் குற்றச்சாட்டு.

ஆனால் தான் இக்கேள்வியை சபையில் கேட்கவில்லை. அதனால் பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் ஃபேஸ்புக்கில் கேள்வி எப்படி இடம் பெற்றது என்று கேட்டார். இதனால் ஃபேஸ்புக்கிற்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொடுத்துள்ளதாக கூறினார்.

சமூக ஆர்வலர் ஷெட்யே மாநில மின்சாரத் துறையில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கப்ரால் கொடுத்த புகார் உரிமை மீறல் குழுவிற்கு அனுப்பப்பட்டதாக பேரவைத் தலைவர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். 

தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கப்ரால், “அரசிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு தனது முழு நேரத்தையும் கடமையில் கவனம் செலுத்தி செலவிட வேண்டிய ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அனுப்பி வருகிறார். அவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது. அவருக்கு இந்த சமூக சேவை பிடித்திருந்தால் வேலையை விட்டுவிட்டு இச்செயலைச் செய்யலாம்” என்றார்.


Next Story