பாலியல் புகார் விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் கொள்ளுப்பேரன் கைது
பாலியல் வன்கொடுமை புகாரில் விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் கொள்ளுப்பேரனை மஹாராஷ்ட்ரா போலீஸ் கைது செய்துள்ளது.
மும்பை
மராட்டிய மாநிலம் புனேவில் வசித்து வரும் ரோகித் திலக் அந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினராவார். இவர் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் கொள்ளுப்பேரன் ஆவார். இவரின் தாத்தா ஜெயந்த்ராவ் திலக் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.
ரோஹித் திலக் பாலியல் பலாத்காரம் செய்ததாக 40 வயது பெண் ஒருவர் புனே போலீஸில் புகார் செய்துள்ளார். ரோகித்துக்கும் அந்தப் பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களாகத் தொடர்பு இருந்ததாகவும் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மாறான உறவுக்குக் கட்டாயப்படுத்தினார்'' எனவும் புகார் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் ரோஹித் மீது பாலியல் குற்றச்சாட்டு, மிரட்டல் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை புனே காவல்துறை இன்று காலை கைதுசெய்து விசாரித்து வருகிறது.

Related Tags :
Next Story