சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பாஸ்போர்ட்டு ரத்து


சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பாஸ்போர்ட்டு ரத்து
x
தினத்தந்தி 19 July 2017 11:00 AM IST (Updated: 19 July 2017 11:00 AM IST)
t-max-icont-min-icon

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பாஸ்போர்ட்டு ரத்து செய்யப்பட்டது.


மும்பை, 

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாகவும், அதற்கு நிதியுதவி அளித்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

ஜாகிர் நாயக் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கோர்ட்டும் அவருக்கு நோட்டீசு அனுப்பி இருக்கிறது. இருப்பினும், அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 51 வயது மத போதகர் ஜாகிர் நாயக்கின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு மும்பை மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கேட்டு கொண்டனர். இதனை ஏற்று ஜாகிர் நாயக்கின் பாஸ்போர்ட்டை பாஸ்போர்ட்டு அலுவலகம் ரத்து செய்தது. 

ஜாகிர் நாயக்கின் பாஸ்போர்ட்டு ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகமும் ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது.

Next Story