சிறைசாலைக்குள் சசிகலா புதிய வீடியோக்கள் இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்பு
சசிகலா வீடியோக்கள் கன்னட தனியார் டி.வி.சேனல் நிருபர் கையில் உள்ளதாகவும், அந்த வீடியோக்கள் இன்று அல்லது நாளை வெளியாகும் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.
பெங்களூர்
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சசிகலா, இளவரசி ஆகியோர் அதே வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையிலும், சுதாகரன் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதை அதே துறையின் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் முழுவதுமாக மறுத்தார்.
இந்த நிலையில் ரூபா மற்றும் சத்திய நாராயணராவ் ஆகிய 2 அதிகாரிகளும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் சசிகலாவுக்கு தனி ‘செல்’லில் 5 அறைகள் ஒதுக்கப்பட்டு இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ மற்றும்

புகைப்படங்கள் நேற்று முன்தினம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சசிகலா சிறை வளாகத்தின் ஒரு பகுதியில் கையில் ஒரு பையுடன் அங்குமிங்குமாக நடமாடும் புதிய தெளிவான வீடியோ காட்சிகள் நேற்று ஒரு கன்னட செய்தி தொலைக்காட்சியில் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிறையில் சசிகலாவின் செயல்பாடு குறித்து புதிய, புதிய வீடியோ காட்சிகள் தொடர்ந்து வெளியாகி வருவதால் அடுத்து என்ன வீடியோ காட்சி வெளிவரும் என்று மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சசிகலா சம்பந்தப்பட்ட மேலும் 2 வீடியோக்கள் புதிதாக வெளியாக வாய்ப்பு உள்ளதாக கன்னட டிவி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. சசிகலாவும், இளவரசியும் மேக்கப் போடுவது போன்ற வீடியோவும் அவர்கள் சிறைக்கு வெளியே ஷாப்பிங் செல்வது போலவும்

வீடியோக்கள் எடுக்கப்பட்டு அந்த வீடியோக்கள் கன்னட தனியார் டி.வி.சேனல் நிருபர் கையில் உள்ளதாகவும், அந்த வீடியோக்கள் இன்று அல்லது நாளை வெளியாகும் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.
Related Tags :
Next Story