பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவை தாக்க சீனா தயாராகி வருகிறது முலாயங் சிங் யாதவ்
பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவை தாக்க சீன தயாராகி வருகிறது பாராளுமன்றத்தில் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 10-ம் தேதி தொடங்குகியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி வரை 20 அமர்வுகளாக இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-சீனா பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கபப்ட்டது. அப்போது சமாஜ்வாதி கட்சி தலைவரும் மக்களவை எம்.பியுமான முலாயம் சிங் யாதவ் பேசுகையில்,
சீனா சிக்கிம் எல்லை பிரச்சனையால் அதிக கோபத்தில் உள்ளது, இதன் மூலம் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவை தாக்க சீனா தயாராகி வருகிறது. பாகிஸ்தான் எல்லை பகுதியில் சீனா அதிகமான ஆயுதங்களை புதைத்து வைத்துள்ளது. நான் பல ஆண்டுகளாக மத்திய அரசை எச்சரிக்கை விடுத்து வருகின்றேன். அவர்களில் யாரும் போதுமான கவனம் செலுத்தவில்லை. இந்தியாவை அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்திட சீனா திட்டமிட்டுள்ளது.
இந்திய புலனாய்வு அமைப்பு நன்கு தெரிந்து கொண்டு அதனை இந்தியா எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story