தலித்துக்களை கொல்வோர், கொடுமைப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் - பஸ்வான்
மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தலித்துக்களை கொல்வோர், கொடுமைப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
புதுடெல்லி
தனது தொடர் ட்வீட்டுக்களில் அவர் தனது மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியை துறந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை கடுமையாக விமர்சித்தார். மாயாவதி முதல்வராக இருந்த போதுதான் உ.பியில் தலித்துகள் மீது அதிகமான கொடுமைகள் இழைக்கப்பட்டது என்று கோரினார் பஸ்வான்.
”எங்கள் கட்சி லோக் ஜன சக்தி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தலித்துக்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள், அதிகாரிகள் மீது கவனம் செலுத்த வேண்டும்” என்றார். மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள் தலித்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு பொறுப்பேற்கச் செய்வதன் மூலம் இது போன்றவை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம் என்றும் பஸ்வான் கூறினார்.
தொடர்ச்சியாக மக்களவை, மாநில சட்டசபை தேர்தல்களில் தலித்துக்களால் நிராகரிக்கப்பட்டு, புதிய தலைவர்கள் உருவாவதாலும் மாயாவதிக்கு மனதளவில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றார் பஸ்வான். பணமதிப்பு நீக்கம் அமலான ஒருவாரத்திற்குள் மாயாவதியின் வங்கிக்கணக்கில் ரூ. 104 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தப்பணம் எங்கிருந்து வந்தது என்பதை மாயாவதி விளக்க வேண்டும் என்றார் பஸ்வான். இப்பணம் தலித்துக்களிடமிருந்து வந்ததா, பெரு நிறுவனங்களிடமிருந்து வந்ததா என்று மாயாவதி தெரிவிக்க வேண்டும் என்றார் பஸ்வான்.
Related Tags :
Next Story