பாகிஸ்தானை பழிவாங்குவேன் - வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரியின் மகன்
ராணுவத்தில் சேர்ந்து, என்னுடைய தந்தையின் உயிரிழப்பிற்கு பழிவாங்குவேன் என வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரியின் மகன் பேசிஉள்ளார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் எல்லையோர பகுதிகளான பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் ரஜோரி மாவட்டத்தின் நவுஷேரா பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதில் சசிகுமார் என்ற ராணுவ இளநிலை அதிகாரி படுகாயம் அடைந்தார். உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இமாசல பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்த அவருக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். சசிகுமார் உயிரிழப்பினால் அவருடைய உறவினர்கள், கிராம மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
ராணுவ அதிகாரியின் மகன் அக்ஷய் குமார் பேசுகையில் “நான் ராணுவத்தில் சேர விரும்புகிறேன், என்னுடைய தந்தையின் உயிரிழப்பிற்கு பழிவாங்குவேன்,” என்றார்.
Related Tags :
Next Story