சிறையில் சுழலும் நாற்காலியில் அமர்ந்து பார்வையாளர்களை சந்தித்த சசிகலா டி.ஐ.ஜி. ரூபா
சசிகலா சிறையில் தனி அறையில் சுழலும் நாற்காலியில் அமர்ந்து பார்வையாளர்களை சந்தித்தார் என டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூர்,
பெங்களூர் சிறை டி.ஐ.ஜி. யாக பணியாற்றிய ரூபா நகர போக்குவரத்து பிரிவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ஜெயிலில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு சலுகைகளையும், வசதிகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
இடமாற்றம் செய்யப்பட்ட பின்பு டி.ஐ.ஜி. ரூபா மீண்டும் அளித்த பேட்டி வருமாறு:-
பெங்களூர் சிறையில் ஒரு வரிசையில் உள்ள அறைகள் முழுவதும் சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. சுமார் 150 அடி நீளமுள்ள அந்த தாழ்வாரத்தின் முன் 5 அறைகள் இருந்தன. சசிகலா இருந்த நடு அறையில் கட்டில், மெத்தை, எல்.இ.டி. டி.வி. இருந்தது.
சிறையில் கைதிகள் - பார்வையாளர்களை சந்திக்கும் இடத்தில் 7 சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளது. பார்வையாளர்களை சசிகலா சந்திக்கும் காட்சி அதில் பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் பதிவாகவில்லை. ஏனென்றால் சசிகலா வேறு ஏதோ ஒரு இடத்தில் பார்வையாளர்களை சந்தித்துள்ளார்.
இது விதி மீறல் இல்லையா? இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத அலுவலக அறையை சசிகலா பயன்படுத்தி இருக்கிறார். அதில் சுழலும் நாற்காலி இருந்தது. எதிரில் சில இருக்கைகள் இருந்தன.
கைதிகளால் நிரம்பி வழியும் சிறையில் ஒருவருக்கு மட்டும் 5 அறைகள் தருவது சரியா? அந்த தாழ்வாரத்தில் இருந்த 5 அறைகளும் சசிகலா கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த அறைகளில் துணிகள், சொந்த மெத்தை உள்ளிட்டவற்றை வைத்திருந்தார்.
பொது சமையலறையில் சசிகலாவுக்கு என தனியாக சமைக்கப்பட்டது. மருத்துவரின் பரிந்துரைகள் ஏதும் இல்லாத நிலையில் இந்த சலுகை தருவது சரியா?
சசிகலாவுக்கும், எனக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. சிறையில் நடை பெறும் விதிமீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தேன். இவ்வாறு ரூபா கூறினார்.

Related Tags :
Next Story