நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் -தம்பிதுரை பேட்டி
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை உள்ளது என தம்பிதுரை கூறி உள்ளார்.
சென்னை,
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்தும் அழுத்தம் கொடுப்பதற்காக 5 அமைச்சர்கள் டெல்லி சென்றனர். அமைச்சர்கள் சி.வி. சண்முகம், கே.பி.அன்பழகன், தங்கமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றனர். நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று காலையில் புறப்பட்டு சென்றார்.
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை தலைமையில் 5 அமைச்சர்களும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினார்கள். மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், மனித வள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், சுகா தாரத்துறை மந்திரி ஜே.பி. நடா, சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், ஆகியோரை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின்னர் தமிழக அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று தர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர்.
சந்திப்புக்கு பின் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;-
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க கோரி பிரதமர் - மத்திய அமைச்சர்களை சந்தித்தோம். நீட் தேர்வில் விலக்கு, தொடர்பாக துறை சார்ந்த அமைச்சர்களுக்கு அறிவுறுத்துவதாக பிரதமர் கூறியுள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை உள்ளது. நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் விலக்கு கோரி நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தேவை. 2012இல் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு நீட் தேர்வை நடத்த திட்டமிட்டன. நுழைவுத்தேர்வு முறை தேவையற்ற தேர்வு என்பது ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் கருத்து இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story