ஐதராபாத் சந்தை பகுதியில் அரிய வகை பறக்கும் பாம்பு கண்டெடுப்பு


ஐதராபாத் சந்தை பகுதியில் அரிய வகை பறக்கும் பாம்பு  கண்டெடுப்பு
x
தினத்தந்தி 20 July 2017 4:54 PM IST (Updated: 20 July 2017 4:54 PM IST)
t-max-icont-min-icon

ஐதராபாத் சந்தையில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் இந்த அரிய வகை பறக்கும் பாம்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திரா மாநிலம் ஐதராபாத் கோஷமஹாலில் மக்கள்  நடமாட்டும் அதிகம் உள்ள சந்தை பகுதியில் சுழலும் ஷட்டர் ஒன்றில் அரிய வகை பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து பொதுமக்கள் உடனடியாக பாம்பு பிடிக்கும் ஆர்வலர் அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பாம்பு பிடிக்கும் ஆர்வலர் அந்த அரிய வகை பாம்பை பிடித்து அங்குள்ள சனிக்புரி விலங்குகள் பாதுகாப்பு மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

இது அரிய வகை பாம்பு குறித்து வனத்துறை அதிகாரி  கூறுகையில்,

இந்த அரிய வகை பறக்கும் பாம்புகள் லேசான விஷத்தன்மை கொண்டது.  இது போன்ற அரிய வகை பாம்புகள் மேற்கு தொடர்ச்சி மலை, வட கிழக்கு வனப்பகுதியில் மட்டுமே காணப்படும்.  இந்த அரிய வகை பாம்புகள் இதுவரை தெலுங்கானா, ஆந்திர பிரதேசத்தில் காணப்படவில்லை.  அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மரக்கட்டைகளில் இருந்து மறைந்து இருந்து வந்து இருக்கலாம்.

இந்தியாவில் 3 வகை பறக்கும் பாம்புகள்  உள்ளது.  அதில் ஆரனேட் என்ற வகையை சேர்ந்தது இந்த பாம்பு .  இவைகள் காற்றில் தங்கள் உடலை மெலிதாக சுருக்கி கொண்டு மரக்கிளைகள், மரங்கள் ஆகியவற்றில் காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story