காஷ்மீர் பற்றிய ஊடக குறிப்பை அமெரிக்கா திருத்திவிட்டது: வெளியுறவுத்துறை தகவல்
காஷ்மீர் பற்றிய ஊடக குறிப்பை அமெரிக்கா தற்போது திருத்திவிட்டது என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் விகே சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் 26 ஆம் தேதி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்தபயணத்தின் போது, ஹிஸ்புல் முஜாகிதின் இயக்க தலைவரான சையது சலாஹூதினை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது. இது பற்றி அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஹிஸ்புல் முஜாகீதின் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது என்ற செய்தி இடம் பெற்று இருந்தது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலமான காஷ்மீரை இந்திய நிர்வாக காஷ்மீர் என்று அமெரிக்கா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சிதம்பரம் உள்ளிட்டோர் இவ்விவகாரத்தை கிளப்பி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில், இன்று பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி விகே சிங், ”காஷ்மீர் பற்றிய ஊடக குறிப்பை அமெரிக்கா தற்போது திருத்திவிட்டது” என்று விளக்கம் அளித்தார்.
Related Tags :
Next Story