டீ கடையில் பட்ட பகலில் வாலிபரை 27 முறை சரமாறியாக வெட்டிய மர்ம கும்பல்


டீ கடையில் பட்ட பகலில் வாலிபரை 27 முறை சரமாறியாக வெட்டிய மர்ம கும்பல்
x
தினத்தந்தி 20 July 2017 9:03 PM IST (Updated: 20 July 2017 9:26 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் டீ கடை ஒன்றில் டீ குடிக்கும் வாலிபரை மர்ம கும்பல் 27 முறை சரமாறியாக வெட்டும் காட்சி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம்  துலே பகுதியில் வசித்து வந்தவர் ரஃபீக்குதீன் (வயது 33) இவர் மீது கற்பழிப்பு, கொலை, என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் துலே பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் இருக்கும் டீக்கடையில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு  11-க்கு மேற்பட்ட  மர்ம கும்பல் ஒன்று வந்தது.அப்போது  டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்த  ரஃபீக்குதீனை சுமார் 27 முறை  கண்டும் துண்டமாக வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.  இதனால் டீ கடை முழுவதும் ரத்தம் வெள்ளமாக ஓடியது. 

சம்பவ இடத்திலேயே  ரஃபீக்குதீன்  துடிக்க துடிக்க உயிரிழந்தார். நெஞ்சை பதைக்க  வைக்கும் காட்சிகள் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.  இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

டீக்கடை உரிமையாளர் மற்றும் நேரில் பார்த்தவர்களை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  துலாவில் டீக்கடையில் வாலிபர் ஒருவரை பட்டபகலில் மர்ம கும்பல் சரமாரியாக வெட்டும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story