துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி, 100 பேர் காயம்
துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 2 பேர் பலியாகியுள்ளனர்.
கோஸ்,
துருக்கி நாட்டின் கிரீக் தீவுகளில் போட்ரம் மற்றும் டாட்கா நகரங்களில் இன்று அதிகாலை 1.31 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் பதிவானது. ப்ளோமரியின் தெற்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 11 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதால், தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் ஒன்றுதிரண்டனர். இந்த திடீர் நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்பதற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களில் 2 பேரின் உடல்களை மீட்டனர். மேலும், படுகாயம் அடைந்த 100-க்கு மேற்பட்டவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story