பசுபாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை தாக்குவதையோ, கொல்வதையோ ஏற்கமுடியாது: மத்திய அரசு


பசுபாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை தாக்குவதையோ, கொல்வதையோ ஏற்கமுடியாது: மத்திய அரசு
x
தினத்தந்தி 21 July 2017 12:34 PM IST (Updated: 21 July 2017 12:34 PM IST)
t-max-icont-min-icon

பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை தாக்குவதையோ, கொலை செய்வதையோ ஏற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு கூறி உள்ளது

புதுடெல்லி

பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை தாக்குவதையும், கொல்வதையும் எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.  அப்போது  மத்திய அரசு சார்பில் தக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில்  பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை தாக்குவதையோ, கொலை செய்வதையோ ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, அரியானா, உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வரும் 4 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story