ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரிவு பிரிவு உபசார விழா- மோடி,எம்.பிக்கள் பங்கேற்பு


ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரிவு பிரிவு உபசார விழா- மோடி,எம்.பிக்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 23 July 2017 6:03 PM IST (Updated: 23 July 2017 6:03 PM IST)
t-max-icont-min-icon

நாளையுடன் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் பாராளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நடைபெறுகிறது.

புதுடெல்லி,

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 25-ம் தேதி நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் நாளையுடன் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் பாராளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நடைபெறுகிறது.

பிரிவு உபசார விழாவில் பங்கேற்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராளுமன்றம் வருகை தந்தார்.  பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கும் பிரிவு  உபசார விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய மந்திரி அருண் ஜெட்லி, எம்.பிக்கள் உள்ளிட்டோர் பிரிவு உபசார விழாவில் பங்கேற்றுள்ளனர்.

Next Story