பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு


பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
x
தினத்தந்தி 24 July 2017 7:24 AM GMT (Updated: 2017-07-24T12:54:23+05:30)

பிரதமர் மோடியுடன் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்.

சென்னை,

முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க  டெல்லி சென்றார்.

அங்கு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மொட்டி அலுவலகத்தில் வைத்து  ஓ.பன்னீர் செல்வம் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு  சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.

சந்திப்பின் போது  நீட்தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் பிரச்சினை போன்றவற்றில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழகத்துக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுக்கும்படி வலியுறுத்தினார்.

இந்த  சந்திப்பின் போது மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், செம்மலை எம்.எல்.ஏ., மனோஜ்பாண்டியன், சத்தியபாமா எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

அதன் பிறகு தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்களும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள்.

Next Story