நீட் தேர்வு விவகாரம் டெல்லி மேல் சபையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் முற்றுகை


நீட் தேர்வு விவகாரம் டெல்லி மேல் சபையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் முற்றுகை
x
தினத்தந்தி 24 July 2017 8:35 AM GMT (Updated: 24 July 2017 8:35 AM GMT)

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக டெல்லி மேல் சபையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் முற்றுகையிட்டனர்.

புதுடெல்லி,

ராளுமன்றத்தின் 2-வது வார கால கூட்டம் இன்று தொடங்கியது. டெல்லி மேல்சபை கூட்டம் அவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் நடந்தது.  சபை கூடியதும்  நீட் தேர்வில் இருந்து  தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரும் பிரச்சினையை அ.தி.மு.க. கிளப்பியது.

நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.பி.க்கள் சபையின் மைய பகுதிக்கு வந்து  முழக்கமிட்டனர். அவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். நீட் தேர்வில்  இருந்து விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு  ஒப்புதல் அளிக்க  வேண்டும்  என்று அவர்கள் வலியுறுத்தினர்.

அ.தி.மு.க. உறுப்பினர்களின் அமளியால் சபை ஒரே  கூச்சல் நிறைந்து காணப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஒபிரையன் கூறும் போது, நீட் தேர்வு வெவ்வேறு மொழிகளில் இருந்ததால் மேற்கு வங்காளம், தமிழ்நாடு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இது பொதுவான பிரச்சினை இரு மாநிலங்களுக்கும் சம்மந்தமானது  அல்ல என்றார்.

சபையின்  மையப்பகுதியில் முழக்கமிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களை பார்த்து இருக்கைக்கு செல்லுமாறு அவை துணைத் தலைவர் வேண்டுகோள் விடுத்தார். அரசிடம் இது தொடர்பாக பேசுவதாக அவர் தெரிவித்தனர்.

சபையில் இருந்த மத்திய மந்திரி ஜே.பி. நட்டா இது பற்றி கூறும் போது ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழகத்தை சேர்ந்த குழு சந்தித்தது என்றார்.

Next Story