கங்கையை சுத்தப்படுத்த புதிய சட்டம் தயாராகிறது - அமைச்சர் உமா பாரதி


கங்கையை சுத்தப்படுத்த புதிய சட்டம் தயாராகிறது - அமைச்சர் உமா பாரதி
x
தினத்தந்தி 24 July 2017 10:14 AM GMT (Updated: 2017-07-24T15:44:25+05:30)

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நோக்கோடு கொண்டு வரப்படும் புதிய சட்டம் தயாராகி இருப்பதாக அமைச்சர் உமாபாரதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதுடெல்லி

வரைவுச் சட்டம் தற்போது தூய்மைப்பணியை செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது. இதை முடிவு செய்த பின்னர் மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும். அதன் பின்னரே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார் பாரதி.

புதிய சட்டம் தனது அமைச்சகத்தின் விவாதத்தின் கீழ் இருக்கிறது என்றார் பாரதி. கங்கையை சுத்தப்படுத்தும் பல்வேறு வழிமுறைகளை அடுத்து நடவடிக்களுக்கான பலனை வரும் 2018 ஆம் ஆண்டிலிருந்து காணலாம் என்றார் பாரதி. 

ஐரோப்பிய நதிகளான தேம்ஸ் அல்லது ரைன் போன்றது கிடையாது நமது கங்கை நதி; இந்நதியை சுத்தப்படுத்துவது மிகப் பெரியதொரு பணியாகும். இந்நதியில் ஆண்டுதோறும் சுமார் 60 கோடி மக்கள் குளிக்கின்றனர் என்று சுட்டிக்காட்டினார் உமா பாரதி. 

இதற்கு முன்னதாக கங்கையை சுத்தப்படுத்தும் பணியை செய்யும் நமாமி கங்கே திட்டத்தை விரைவு படுத்தும் நோக்கத்தில் புதிய கங்கை சட்டத்தை கொண்டு வர ஒரு குழுவை நியமித்தது. அத்துடன் மாசினை அகற்றவும், தூர்வாரவும் வழிமுறைகளை வகுக்கவும் இக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டது. இக்குழுவிற்கு சுதந்திர போராட்ட தலைவரான பண்டின் மதன் மோகன் மாளவியாவின் பேரனும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான கிர்தர் மாளவியாவின் தலைமை வகித்தார். கிர்தர் மாளவியாவிற்கு 79 வயதாகிறது. இவர் தனது பாட்டனார் துவங்கிய கங்கா மகாசபை எனும் அமைப்பின் தலைவரும் ஆவார். 


Next Story