குஜராத்தில் வெள்ளம்: 25 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்


குஜராத்தில் வெள்ளம்: 25 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 25 July 2017 4:04 AM GMT (Updated: 2017-07-25T10:01:36+05:30)

குஜராத்தில் வெள்ளம் 25 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம், ராஜஸ்தானில் இருவர் உயிரிழப்பு


புதுடெல்லி,

வட மாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. மராட்டியம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் அதனையொட்டி உள்ள மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இதற்கான பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில மீட்பு குழு மற்றும் ராணுவமும் களமிறங்கி உள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தற்போதைய முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். சுமார் 25 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். 

குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தினால் பனாஸ்காந்தா, சாபார்காந்தா, ஆனந்த், பதான் மற்றும் வால்சாத் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளது. பனாஸ்காந்தா மாவட்டத்தில் மட்டும் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து சுமார் 11 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வடக்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிராவில் பெய்த கனமழையால் சபர்மதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

ராஜஸ்தான் மாநிலத்திலும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. மாநிலத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தெற்கு ராஜஸ்தானில் பெய்த கனமழை காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தாந்திவாடா, சிபு மற்றும் தாரோய் ஆகிய அணைகள் நிரம்பி வழிகிறது. தெற்கு ராஜஸ்தானில் பெய்த கனமழை காரணமாகவும் பனாஸ்காந்தா, பதான் மற்றும் ஆனந்த் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. வடக்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் தேசிய பேரிடர் படையின் 12 குழுக்கள் மீட்பு பணியில் இறங்கிஉள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை உள்பட ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. கூடுதல் படைகளும் அங்கு அனுப்பட்டு உள்ளது.

வெள்ளம் காரணமாக குஜராத் மாநிலத்தில் பெரும் பகுதியில் தண்டவாளம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் ஆமதாபாத் மற்றும் டெல்லி இடையிலான ரெயில் சேவையானது நிறுத்தப்பட்டு உள்ளது. டெல்லியை நோக்கிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மெக்சானாவில் இருந்து மீண்டும் ஆமதாபாத்திற்கே திரும்பியது. குஜராத் மாநிலத்தில் மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் ஜூன் மாதத்தில் இருந்து 70 பேர் உயிரிழந்து உள்ளனர் என மீடியா தகவல்கள் கூறுகிறது.  

மேற்கு வங்காள மாநிலத்திலும் கனமழையினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு வெள்ளம் போன்ற நிலை இல்லை என மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறிஉள்ளார். மேற்கு வங்காள மாநிலத்திலும் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story