அரசு அதிகாரிகளை தலை கீழாக தொங்கவிடுவோம் முதல்-மந்திரி பேச்சால் சர்ச்சை


அரசு அதிகாரிகளை தலை கீழாக தொங்கவிடுவோம் முதல்-மந்திரி பேச்சால் சர்ச்சை
x
தினத்தந்தி 25 July 2017 5:47 AM GMT (Updated: 2017-07-25T11:17:33+05:30)

கோப்புகளை கிடப்பில் போடும் அதிகாரிகள் தலை கீழாக தொங்கவிடப்படுவார்கள் என முதல்-மந்திரி பேசியது சர்ச்சையாகி உள்ளது.


போபால்,

வழக்கமான வருவாய் துறை கோப்புகள் தொடர்பான பணிகளை முடிப்பதில் காலம் கடத்தும் அதிகாரிகள் தலை கீழாக தொங்கவிடப்படுவார்கள் என மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பேசிஉள்ளார். 

பாரதீய ஜனதா கட்சியின் மாநில உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சிவராஜ் சிங் சவுகான், இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார். பண்டல்காந்த் பிராந்தியத்தை சேர்ந்த பாரதீய ஜனதா நிர்வாகி ஒருவர், வருவாய் துறை தொடர்பான கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாக புகார் தெரிவித்தார், இவ்விவகாரத்தில் காலம் கடத்தப்படுவதை தடுக்க சவுகான் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். உயர் அதிகாரிகளை மிரட்ட சவுகான் கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியதை காங்கிரஸ் கண்டித்து உள்ளது. 

பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜ்நிஷ் அகர்வால் பேசுகையில், “விவசாயிகள் பிரச்சனையில் முதல்-மந்திரி தீவிரமாக உள்ளார். விவசாயிகளின் வருவாய் தொடர்பான கோப்புகளை நீண்ட காலமாக நிலுவையில் வைக்கும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தொடர்பாக பேசினார்,” என்றார். காங்கிரஸ் விமர்சிக்கையில் மத்திய பிரதேச மாநில பா.ஜனதா அரசு தன்னுடைய தோல்வியை, அதிகாரிகள் பக்கம் திருப்புகிறது என்று கூறிஉள்ளது. முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் பேச்சு அவருடைய விரக்தியை காட்டுகிறது என காஙிக்ரஸ் கூறிஉள்ளது.

வருவாய் மற்றும் விவசாய துறையில் பெரும் ஊழல்கள் உள்ளது. விவசாயிகள் பாரதீய ஜனதாவின் தவறான கொள்கையினால் பெரும் பாதிப்பில் உள்ளனர். ஆனால் தன்னுடைய பொறுப்பில் இருந்து தப்பிக்க இப்போது முதல்-மந்திரி அதிகாரிகள் மீது பழிபோடுகிறார் என காங்கிரஸ் கட்சியின் அம்மாநில தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பேசிஉள்ளார். மத்திய பிரதேச அதிகாரிகள் சவுகானுடன் இணைந்து 11 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளனர். இப்போது முதல்-மந்திரி தன்னுடைய தோல்விக்கு அதிகாரிகளை சாடுகிறார் என காங்கிரஸ் கூறிஉள்ளது.


Next Story