பழம் பெரும் நடிகை மதுபாலாவின் மெழுகுச் சிலை திறப்பு


பழம் பெரும் நடிகை மதுபாலாவின் மெழுகுச் சிலை திறப்பு
x
தினத்தந்தி 25 July 2017 10:18 AM GMT (Updated: 25 July 2017 10:18 AM GMT)

பழம் பெரும் நடிகை மதுபாலாவின் திருவுருவ மெழுகுச் சிலை டெல்லியில் உள்ள பிரபல அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி

லண்டனில் உள்ள பிரபல மேடம் டூஸாட் மெழுகுச் சிலை அருங்காட்சியம் பிரபலமானது. இங்கு உலக அளவில் பிரபலமானவர்களின் மெழுகு உருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மெழுகுச் சிலையாக இடம் பெறுவது பிரபலங்களுக்கு ஓர் கௌரவமாகும். அந்த வரிசையில் முன்னாள் பாலிவுட் கதாநாயகியான மதுபாலாவின் மெழுகுச் சிலையும் இடம் பெறவுள்ளது. 

பழைய இந்தி திரைப்படங்களான அனார்கலி, மொகல்-ஏ-ஆஸாம் போன்றவற்றில் தனது நடிப்பினாலும், அழகாலும் ரசிகர்களை ஈர்த்தவர் மதுபாலா. அவரது உருவச் சிலை டெல்லியிலுள்ள மேடம் டூஸாட் அருங்காட்சியகத்தின் கிளையில் வைக்கப்படவுள்ளது. 

இதற்கு முன்பு மதுபாலாவின் நினைவுத் தபால்தலை 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 

இந்தி திரையுலகிலிருந்து ஏற்கனவே அமிதாப் பச்சன், ஷாரூக் கான் உட்பட பலருக்கும் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story