டெல்லி மேல்–சபைக்கு 3–வது முறையாக போட்டியிட சீதாராம் யெச்சூரிக்கு வாய்ப்பு அளிக்கப்படாது


டெல்லி மேல்–சபைக்கு 3–வது முறையாக போட்டியிட சீதாராம் யெச்சூரிக்கு வாய்ப்பு அளிக்கப்படாது
x
தினத்தந்தி 25 July 2017 10:45 PM GMT (Updated: 25 July 2017 8:18 PM GMT)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தொடர்ந்து 2–வது முறையாக டெல்லி மேல்–சபை எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார்.

புதுடெல்லி,

அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. மேற்கு வங்காளத்தில் அந்த காலியிடத்துக்கு அடுத்த மாதம் 8–ந் தேதி தேர்தல் நடக்கிறது.

அதில், சீதாராம் யெச்சூரியை மீண்டும் நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்காள பிரிவு, அக்கட்சியின் முக்கிய முடிவு எடுக்கும் மத்திய குழுவுக்கு சிபாரிசு செய்தது. இதுபற்றி விவாதிக்க மத்திய குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

சீதாராம் யெச்சூரிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மத்திய குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அவருக்கு வாய்ப்பு அளிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

‘எந்த தலைவருக்கும் டெல்லி மேல்–சபை தேர்தலில் 2 தடவைக்கு மேல் வாய்ப்பு அளிப்பது இல்லை என்ற கட்சி விதியை மனதில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது’ என்று ஒரு மூத்த தலைவர் கூறினார்.


Next Story