பீகார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து


பீகார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 26 July 2017 1:58 PM GMT (Updated: 2017-07-26T19:28:32+05:30)

பீகார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.புதுடெல்லி,


பீகாரில் ஊழல் புகாரில் சிக்கிய லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகாததை அடுத்து முதல்-மந்திரி பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்து உள்ளார். இந்நிலையில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். பீகார் மாநில முதல்-மந்திரியின் ராஜினாமா முடிவை வரவேற்கிறேன். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அவர் இணைந்திருப்பதற்கு பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன். “உங்களுடைய முடிவை 125 கோடி மக்களும் வரவேற்கிறார்கள், ஆதரவளிக்கிறார்கள்,” என பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார். 

Next Story