குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா தேர்வு செய்யப்படுகிறார்


குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா தேர்வு செய்யப்படுகிறார்
x
தினத்தந்தி 26 July 2017 3:59 PM GMT (Updated: 2017-07-26T21:29:30+05:30)

குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானி தேர்வு செய்யப்பட உள்ளனர்.


புதுடெல்லி,

பாரதீய ஜனதாவில் இருந்து எல்லோருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றதை தொடர்ந்து, கட்சியின் தலைவர் அமித்ஷா குஜராத் மாநில மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலத்தில் இருந்து மூன்று எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக தேர்தல் ஆகஸ்ட் 8-ம் தேதி நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகமது படேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். 

பாரதீய ஜனதா சாபில் அமித் ஷாவும் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியும் போட்டியிட உள்ளனர். 52 வயதாகும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா குஜராத் மாநில எம்.எல்.ஏ.வாக உள்ளார். குஜராத் மாநில அரசியலில் பிரதமர் மோடியும்- அமித்ஷா இணை அசைக்கமுடியாத வெற்றிக்கண்டது, பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு பிரதமர் ஆகி டெல்லி சென்றதும் அமித்ஷாவும் டெல்லி சென்றார். இருவர் கூட்டணியில் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் பாரதீய ஜனதா வெற்றிநடை போட்டு வருகிறது. 

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் அமித்ஷா மாநிலங்களவைக்கு எம்.பி.யாகும் அறிவிப்பு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story