பீகாரில் பாஜக ஆதரவுடன் நாளை மீண்டும் ஆட்சி அமைக்கிறார் நிதிஷ்குமார்


பீகாரில் பாஜக ஆதரவுடன் நாளை மீண்டும் ஆட்சி அமைக்கிறார் நிதிஷ்குமார்
x
தினத்தந்தி 26 July 2017 5:29 PM GMT (Updated: 2017-07-26T22:59:42+05:30)

பீகாரில் பாஜக ஆதரவுடன் நாளை மீண்டும் ஆட்சி நிதிஷ்குமார் அமைக்கிறார்.

பாட்னா,

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பீகார் துணை முதல்–மந்திரி தேஜஸ்வி யாதவ் பதவி விலக மறுத்ததால், அந்த மாநில முதல்–மந்திரி நிதிஷ்குமார்  தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பீகாரில் பாஜக ஆதரவுடன் நாளை மீண்டும் நிதிஷ்குமார் ஆட்சி அமைக்கிறார்.  பீகார் மாநில முதல்-அமைச்சராக  நிதிஷ்குமார் நாளை மாலை 5 மணிக்கு மீண்டும் பதவி ஏற்கிறார்.

நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் பாஜக இடம்பெறும் என்று பாஜக மாநில தலைவர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.
துணை முதல்வராக சுஷில்குமார் மோடி மற்றும் 28 அமைச்சரகள் நாளை மாலை 5 மணிக்கு பதவி ஏற்றுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே பீகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Next Story