நடப்பு நிதியாண்டில் ரூ.11,166 கோடியில் கூடுதல் செலவின திட்டங்கள்


நடப்பு நிதியாண்டில் ரூ.11,166 கோடியில் கூடுதல் செலவின திட்டங்கள்
x
தினத்தந்தி 26 July 2017 11:45 PM GMT (Updated: 2017-07-27T01:23:56+05:30)

நடப்பு நிதியாண்டில் ரூ.11,166.18 கோடி மதிப்பிலான துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதி மந்திரி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

புதுடெல்லி,

நடப்பு நிதியாண்டில் ரூ.11,166.18 கோடி மதிப்பிலான துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2017–18–ம் நிதியாண்டுக்கான இந்த முதல்கட்ட துணை மானிய கோரிக்கையில், 61 மானியங்கள் மற்றும் 3 ஒதுக்கீடுகள் அடங்கியுள்ளன.

இதில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் உதவி மானிய திட்டங்களுக்கு ரூ.7,000 கோடியும், ஜி.எஸ்.டி. தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான செலவினத்துக்கு ரூ.386 கோடியும், ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக சுமார் ரூ.250 கோடியும் செலவிடப்படும்.

அருண் ஜெட்லி தாக்கல் செய்த இந்த கூடுதல் செலவின திட்டங்களுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் கோரப்பட்டது.


Next Story