மக்கள் முட்டாள்கள் அல்ல: தேஜஸ்வி யாதவ் டுவிட்டரில் கடும் விமர்சனம்


மக்கள் முட்டாள்கள் அல்ல: தேஜஸ்வி யாதவ் டுவிட்டரில் கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 27 July 2017 9:28 AM GMT (Updated: 2017-07-27T14:57:54+05:30)

பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் முதல் மந்திரியாக பதவியேற்றது குறித்து தேஜஸ்வி யாதவ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பாட்னா,

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினுடனான கருத்து வேறுபாட்டால் நேற்று முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், பாரதீய ஜனதா ஆதரவுடன் 

இன்று மீண்டும் முதல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். நிதிஷ் குமார் முதல் மந்திரியாக பதவி ஏற்றதற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. 

துணை முதல் மந்திரி பதவி வகித்து வந்த தேஜஸ்வி யாதவ், தனது டுவிட்டரில் நிதிஷ் குமாரை கடுமையாக சாடியுள்ளார். மக்கள் முட்டாள்கள் இல்லை எனவும், அதிகாரத்திற்கான பேராசை, அதன் சொந்த அழிவை வெளிப்படுத்தும் எனவும் நிதிஷ் குமாரின் சந்தர்ப்பவாத அரசியலை இந்த செயல் வெளிக்காட்டுவதாகவும் கடுமையாக சாடியுள்ளார். 

Next Story