இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் சாலை விபத்துக்கள், 1.5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் சாலை விபத்துக்கள், 1.5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்
x
தினத்தந்தி 27 July 2017 12:52 PM GMT (Updated: 2017-07-27T18:22:46+05:30)

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் சாலை விபத்துக்கள் நேரிடுகிறது, இதில் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.புதுடெல்லி,


மக்களவையில் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்காரி, கடந்த மூன்று வருடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துக்களின் எண்ணிக்கையில் 4 சதவித உயர்வு காணப்படுகிறது, இதற்கிடையே ஒரு ஆண்டிற்கு நாட்டில் ஆட்டோ மொபைல் செக்டார் வளர்ச்சியானது 22 சதவிதமாக உள்ளது என கூறிஉள்ளார். நாட்டில் 30 சதவிதம் போலியான ஓட்டுநர் உரிமங்கள் பயன்பாட்டில் இருக்கிறது என கூறிஉள்ளார். பாதுகாப்பான சாலை போக்குவரத்துக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது, சாலை விபத்துக்களில் உயிரிழப்போர் எண்ணிக்கையானது குறைந்து வருகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

முதல்முறையாக மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள பாலங்கள் (1.62 லட்சம் வரையில்) தொடர்பாக ஆய்வை மேற்கொண்டு உள்ளதாக நிதின் கட்காரி கூறிஉள்ளார். 147 பாலங்கள் மோசமான நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டு உள்ளது என குறிப்பிட்டு உள்ளார். 33 பாலங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 50-க்கும் மேற்பட்ட பாலங்கள் 100 வருடங்களுக்கு மேற்பட்டவை. 1,628 பாலங்கள் 50 வருடங்களுக்கு முன்னதாக கட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பாலங்களை சரிசெய்ய, புணரமைக்க தேவையான பணிகளை முன்னெடுக்க நிர்வாக குழுக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story