பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியினர் சந்திப்பு


பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியினர் சந்திப்பு
x
தினத்தந்தி 27 July 2017 4:49 PM GMT (Updated: 2017-07-27T22:19:31+05:30)

டெல்லியில் பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியினர் சந்தித்து பேசினர்.

புதுடெல்லி,

இங்கிலாந்தில் நடந்த பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. தோல்வியை சந்தித்தாலும், கடுமையாக போராடிய இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தாயகம் திரும்பிய இந்திய அணியினருக்கு டெல்லியில் பாராட்டு விழா நடைபெற்றது. பின்னர் பெண்கள் அணியினருடன் பிரதமர் கலந்து கொண்டு பேசினார். அதனை தொடர்ந்து பெண்கள் அணியினர், தங்களின் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசளித்தனர். அதனை தொடர்ந்து பிரதமர் மோடியுடன் பெண்கள் அணியினர் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் 10 வீராங்கனைகளுக்கு தலா ரூ.13 லட்சம் பரிசு தொகையினை மத்திய ரெயில்வே மந்திரி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story