பாராளுமன்ற வளாகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக எம்.பி.க்கள் போராட்டம்


பாராளுமன்ற வளாகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக எம்.பி.க்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 July 2017 11:15 PM GMT (Updated: 2017-07-28T03:14:10+05:30)

நாடு முழுவதும் மருத்துவ, பல் மருத்துவ பட்ட படிப்புகளுக்கும், பட்ட மேற்படிப்புகளுக்கும் ‘நீட்’ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வினை சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.

புதுடெல்லி,

இந்த தேர்வை தமிழகத்தில் அரசியல் கட்சிகள் முழு மூச்சுடன் எதிர்த்து வருகின்றன. ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தரவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள தேசப்பிதா மகாத்மா காந்தி சிலை முன்பாக தமிழகம், மேற்கு வங்காள மாநிலங்களை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

அவர்கள், ‘‘மாணவர்களுக்கு நீதி வழங்குங்கள்’’, ‘‘நீட் தேர்வை திரும்பப்பெறுங்கள்’’ என்பவை உள்ளிட்ட வாசகங்களைக் கொண்ட பதாகைகளையும், அட்டைகளையும் ஏந்தி இருந்தனர்.

இந்த போராட்டத்தில் தி.மு.க. எம்.பி., கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., தீரக் ஒ பிரையன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.க்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Next Story