தேசிய செய்திகள்

கேரள பெண் டாக்டர் கற்பழிப்புபுகைப்பட கலைஞர் கைது + "||" + Kerala woman doctor in rape Photographer arrested

கேரள பெண் டாக்டர் கற்பழிப்புபுகைப்பட கலைஞர் கைது

கேரள பெண் டாக்டர் கற்பழிப்புபுகைப்பட கலைஞர் கைது
கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜின்சன் லோனப்பன். மலையாள திரைப்படங்களில் உதவி புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார்.
கொச்சி,

கடந்த மார்ச் மாதம் இவருக்கு அதே மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் டாக்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளம் பெண்ணுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எனவே சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஜின்சன் லோனப்பன் அவருடன் நெருங்கி பழக தொடங்கினார். இதற்காக அவர் அந்த பெண்ணிடம் இருந்து அடிக்கடி பணம் பெற்றதாக தெரிகிறது.


இந்த நிலையில் அந்த இளம் பெண் டாக்டர் நேற்று முன்தினம் ஜின்சன் லோனப்பன் மீது போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். அவர் தனது புகாரில், ஜின்சன் லோனப்பன் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தன்னை கற்பழித்துவிட்டதாகவும், ரூ.33 லட்சத்தை கையாடல் செய்துவிட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த புகாரின் பேரில் ஜின்சன் லோனப்பன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.