குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பெண்ணை தடுத்த போலீசுக்கு முத்த மழை


குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பெண்ணை தடுத்த போலீசுக்கு முத்த மழை
x
தினத்தந்தி 28 July 2017 9:02 AM GMT (Updated: 28 July 2017 9:02 AM GMT)

கொல்கத்தாவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பெண்ணை தடுத்து நிறுத்திய போலீசிற்கு அப்பெண் முத்தமழை பொழிந்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் ஒருவர் இரவு விருந்தில் கலந்து கொண்டுவிட்டு முழு போதையில் வீடு திரும்பியுள்ளார், போதையின் காரணமாக அவரால் வண்டியை ஒழுங்காக ஓட்ட முடியவில்லை.

உப்பு ஏரி அருகே கிழக்கு மெட்ரோபாலிட்டன் சாலையில் வந்துகொண்டிருந்த பெண், வண்டியை ஓட்டும்போதே மயக்க நிலைக்குச் சென்றார், இதனால் வண்டி அங்கே இருந்த தடுப்பு சுவர் மீது மோதியது.

அருகில் இருந்த டாக்ஸி ஓட்டுநர் அவரைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் அப்பெண் ஓட்டுநரைப் பிடித்துத் தள்ளிவிட்டார்.

அப்போது, போலீஸ் ஒருவர் அப்பெண்ணையும் அவரது நண்பரையும் காரில் இருந்து இறக்க முயற்சி செய்தபோது, அப்பெண் போலீசை தன் பக்கம் இழுத்து முத்த மழை பொழிந்துள்ளார்.

கண்மூடித்தனமாக வண்டி ஓட்டிய குற்றத்திற்காக அப்பெண் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story