ஹிஜிபுல் முஜாகிதீன் முன்னாள் தளபதி தலைமையில் அல் கொய்தா புதிய அமைப்பு காஷ்மீரில் தொடக்கம்


ஹிஜிபுல் முஜாகிதீன் முன்னாள் தளபதி தலைமையில் அல் கொய்தா புதிய அமைப்பு காஷ்மீரில் தொடக்கம்
x
தினத்தந்தி 28 July 2017 11:25 AM GMT (Updated: 28 July 2017 11:25 AM GMT)

தீவிரவாத அமைப்பான அல் கொய்தா காஷ்மீரில் அன்சார் கவுசட்-உல்-ஹிந்த் என்ற பெயரில் ஒரு புதிய பிரிவை அமைத்துள்ளது. ஹிஜிபுல் முஜாகிதீன் முன்னாள் தளபதி 23 வயதான ஜாகீர் மூசா, இந்த அமைப்பிற்கு தலைமை தாங்குகிறார்.

அல்கொய்தாவின் உலகளாவிய இஸ்லாமிய ஊடக முன்னணி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஹீரோ முஜஹித் புர்கான்  வானி வீரமரணத்திற்கு பிறகு  காஷ்மீரில் ஜிஹாத் விழிப்புணர்வு அடைந்துள்ளது. காஷ்மீர் முஸ்லீம்களின் மீது இந்திய படையெடுப்பாளர்களின் கொடூரமான  ஆக்கிரமிப்பைத் தடுக்க ஜிகாத் கொடியைக் கொண்டுவர கடமைப்பட்டுள்ளதால், ஜிஹாத் மூலம், மற்றும் அல்லா உதவியுடன் நாங்கள் எங்கள் தாயகம் காஷ்மீரை விடுவிப்போம். "

இந்த இலக்கை அடைவதற்கு,ஜிகாத் ஒரு புதிய இயக்கம் தியாகி புர்கான் வானி தோழர்களால் முஜஹித் ஜாகீர் மூஸாவின் தலைமையில் நிறுவப்படுகிறது என கூறப்பட்டு உள்ளது.

Next Story