பாலியல் பலாத்காரத்தால் பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த 16 வயது சிறுமி


பாலியல் பலாத்காரத்தால் பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த 16 வயது சிறுமி
x
தினத்தந்தி 29 July 2017 8:29 AM GMT (Updated: 2017-07-29T13:59:15+05:30)

மத்திய பிரதேச மாநிலம் பார்வாணி மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்தால் பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த 16 வயது சிறுமி கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் பார்வாணி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் காலி மைதானத்தில் பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தை மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கதறியபடி இருந் தது. குழந்தை முகத்தில் காயங்கள் இருந்தன.

இதை பார்த்த அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் கிராம மக்களிடம் தெரிவித்தனர். உடனே கிராம மக்கள் குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த குழந்தை அக் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பிறந்தது தெரிய வந்தது.

சிறுமியை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுவன் கற்பழித்துள்ளான். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தாள். இதுபற்றி அறிந்ததும் அவளது பெற்றோர் கர்ப்பத்தை மறைத்து உடனடியாக சிறுமிக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்தனர். பின்னர் அவளை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர்.

இந்த நிலையில் அவளுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்தது பற்றி கணவர் குடும்பத்தாருக்கு தெரிந்தால் தனது வாழ்க்கை கெட்டுவிடும் என்று கருதி சிறுமியும், அவளது பெற்றோரும் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்து  குழி தோண்டி உயிரோடு புதைத்து உள்ளனர்.

இதையடுத்து சிறுமி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவளை கற்பழித்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story