இஸ்லாமிற்கு எதிரான வன்முறையை நிறுத்த தீவிரவாதிகளை கேட்டு கொள்ள வேண்டும்


இஸ்லாமிற்கு எதிரான வன்முறையை நிறுத்த தீவிரவாதிகளை கேட்டு கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 29 July 2017 1:01 PM GMT (Updated: 2017-07-29T18:30:51+05:30)

இஸ்லாமுக்கு எதிரான வன்முறையை நிறுத்த தீவிரவாதிகளை கேட்டு கொள்ள வேண்டுமென கிலானிக்கு மக்கள் ஜனநாயக கட்சியின் எம்.பி. பெய்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் 18வது நிறுவன தின நிகழ்ச்சி ஸ்ரீநகரில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்.பி. முஜாபர் ஹுசைன் பெய்க் பேசும்பொழுது, இஸ்லாமின் அடிப்படை கொள்கைக்கு எதிரானது வன்முறை.  தீவிரவாதிகள் அவற்றை நிறுத்த வேண்டுமென்று பிரிவினைவாத தலைவர் கிலானி கேட்டு கொள்ள வேண்டுமென நான் வேண்டுகோள் வைக்கிறேன் என கூறினார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 7 பேர் தேசிய புலனாய்வு அமைப்பினால் தீவிரவாதத்திற்கு நிதி வழங்குதலுடன் தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்டது பற்றி அவர் பேசும்பொழுது, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும் என கூறினார்.

எனினும், பள்ளி கூடங்களை எரித்தல் மற்றும் ஒன்றுமறியாத மக்களை கொல்லுதல் ஆகியவற்றில் எந்த பங்கும் வகிக்காத பிரிவினைவாத தலைவர்கள் தண்டனைக்கு ஆளாவதில்லை என்றும் பெய்க் கூறினார்.


Next Story