குஜராத்தில் வரலாறு காணாத வெள்ளம்: சிறுநீரக நோயாளியை காப்பாற்றிய விமானப்படை


குஜராத்தில் வரலாறு காணாத வெள்ளம்: சிறுநீரக நோயாளியை காப்பாற்றிய விமானப்படை
x
தினத்தந்தி 29 July 2017 2:36 PM GMT (Updated: 2017-07-29T20:05:54+05:30)

குஜராத்தில் அபியான் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய சிறுநீரக நோயாளியை விமானப்படை வீரர்கள் அவசரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அகமதாபாத்,

குஜராத்தில் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  பல கிராமங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டுள்ள  மக்களை மீட்பதற்காக ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்த நிலையில் அபியானா கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கபட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில்  சிறுநீரக நோயாளி ஒருவரை  விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Next Story