காஷ்மீர் இளைஞர்கள் பிரிவினைவாதிகளை கேள்விக் கேட்கத் துவங்கிவிட்டார்கள் - அமைச்சர் ஜிதேந்திரா


காஷ்மீர் இளைஞர்கள் பிரிவினைவாதிகளை   கேள்விக் கேட்கத் துவங்கிவிட்டார்கள் - அமைச்சர் ஜிதேந்திரா
x
தினத்தந்தி 6 Aug 2017 8:56 PM GMT (Updated: 6 Aug 2017 8:55 PM GMT)

காஷ்மீர் இளைஞர்கள் பிரிவினைவாதிகளை நோக்கி கேள்விக் கேட்கத் துவங்கியுள்ளார்கள் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங்.

ஜம்மு

சில பிரிவினைவாதிகள் ஒரே நாளில் பணக்காரர்களாக ஆவது எப்படி என்று இளைஞர்கள் கேட்கிறார்கள் என்றார் அவர். “காஷ்மீரின் சுதந்திர போராட்டம் உலகின் எந்தவொரு சுதந்திர போராட்டம் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது; காந்தியாரின் வழியா, மண்டேலா வழியா, மார்ட்டின் லூதர் கிங் வழியா எந்த வழியில் ஒரே நாளில் தலைவர்களாகி, பொருள் ஈட்டி பணக்காரர்கள் ஆகி வாழ்வின் அனைத்து வசதிகளையும் அனுபவிக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர்.

செய்தியாளர்கள் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய சோதனைகளை ஒட்டி எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கும் போது இவ்வாறு கேள்வி எழுப்பினார். 

பிரிவினைவாதத் தலைவர்களை கடுமையாக விமர்சித்த அவர், “ உங்களது பிள்ளைகள் நல்ல பதவிகளில் அமர்ந்துள்ளனர், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள அமைதியான பகுதிகளில் வாழ்கின்றனர், அதே சமயத்தில் ஏழைகளின் வீட்டுப் பிள்ளைகளை நீங்கள் தூண்டிவிட்டு அவர்களை தியாகிகள் ஆக்குகின்றீர்கள்” என்றார் அவர். ” வழிமுறை சரியாக இருக்க வேண்டுமென்றால் சீக்கியர் குருவான குரு கோபிந்த் சிங் தன்னுடைய பிள்ளைகளை முதலில் தியாகிகள் ஆக்கிவிட்டு பின்னரே அடுத்தவர் வீட்டுப் பிள்ளைகளை தியாகிகள் ஆக்கினார். அதே போல உங்கள் வழிமுறையும் இருக்க வேண்டும்” என்றார் அமைச்சர்.

தனது சொந்தத் தொகுதியான உதாம்பூரில் அமைச்சர் ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மத்திய அரசினால் செய்யப்படும் பல திட்டங்களின் நிலையை ஆய்வு செய்தார்.


Next Story