தேசிய செய்திகள்

உ.பியில் குழந்தைகள் பலியான சம்பவம்: யோகி ஆதித்யநாத் ராஜினமா செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல் + "||" + Infant deaths: Cong says UP CM, health minister should resign

உ.பியில் குழந்தைகள் பலியான சம்பவம்: யோகி ஆதித்யநாத் ராஜினமா செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

உ.பியில் குழந்தைகள் பலியான சம்பவம்: யோகி ஆதித்யநாத் ராஜினமா செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்
உத்தர பிரதேசத்தில் குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று யோகி ஆதித்யநாத் ராஜினமா செய்ய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூளை வீக்கம் ஏற்பட்டு 5 நாட்களில் 60 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 

மாநில அரசால் நடத்தப்படும் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சுகாதாரத்துறை மந்திரி சித்தார்நத் சிங் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.