தேசிய செய்திகள்

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின + "||" + The Indian military tanks left the international competition

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
ரஷியாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ராணுவ டாங்கிகள் போட்டியில் ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளின் டாங்கிகள் கலந்து கொண்டன.

புதுடெல்லி,

ரஷியாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ராணுவ டாங்கிகள் போட்டியில் ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளின் டாங்கிகள் கலந்து கொண்டன. இதில் இந்தியாவின் சார்பில் அர்ஜூனா டாங்கிகள் பங்கு கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டி–90 ரக டாங்கிகள் கலந்து கொண்டன. இவை ரஷியாவில் தயாரான டாங்கிகள் ஆகும்.

ஆரம்பகட்ட சுற்றுகளின் போது இந்திய டாங்கிகள் சிறப்பாக இயங்கிய போதிலும், இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றின் போது, அவற்றில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது. இதனால் இந்திய டாங்கிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.

ரஷியா, சீனா, பெலாரஸ், கஜகஸ்தான் நாடுகளின் டாங்கிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.