என் படத்தை காண்பவர்களில் 5 சதவீதம் பேர் கழிப்பறை கட்டினால் அதுவே வெற்றி - நடிகர் அக்‌ஷய் குமார்


என் படத்தை காண்பவர்களில் 5 சதவீதம் பேர் கழிப்பறை கட்டினால் அதுவே வெற்றி - நடிகர் அக்‌ஷய் குமார்
x
தினத்தந்தி 13 Aug 2017 10:28 AM GMT (Updated: 13 Aug 2017 10:28 AM GMT)

என் படத்தைக் காண்பவர்களில் ஐந்து சதவீதத்தினர் கழிப்பறையைக் கட்டினால் அதுவே வெற்றி என்று கூறியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.

புதுடெல்லி

“டாய்லட் ஏக் பிரேம் கதா “ எனும் பெயரில் புதிதாக படத்தை வெளியிட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இப்படத்தை பார்ப்பவர்களில் 5 சதவீதம் பேர் கழிப்பறை கட்டினாலே அதுவே எனக்கு பெரிய வெற்றி என்றார். அமெரிக்க பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், “ திறந்த வெளிகளில் மலம் கழிப்பது குறித்து கிடைக்கின்ற தகவல்கள் என்னை இப்படத்தை எடுக்கத் தூண்டியது” என்றார். மேலும் அவர் கூறுகையில் எனக்கு படம் பணத்தை அள்ளித்தர வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. எத்தனை பேர் இப்படத்தைக் காண்பார்கள் என்பது எனக்கு தெரியாது. அப்படி காண்பவர்களில் 5 சதவீதம் பேர் டாய்லட் கட்டினாலே பெரிய வெற்றி என்றார். ”ராக்கெட்டுகளை அனுப்புகிற நம்மால் ஏன் நாடு முழுவதும் கழிப்பறைகளை கட்ட முடியவில்லை” என்று கேள்வி எழுப்பினார் அக்‌ஷய். 

பிரதமர் மோடியின் ஸ்வச் பாரத் திட்டத்தை முன்மாதிரியாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இப்படம். ”இது ஒரு காதல் படம்தான்; ஆனால் தேடிப் பார்த்தால் இப்படத்தில் முகத்தில் அறையும் உண்மைகள் இருக்கும்” என்றார். இப்படத்தை தயாரிக்கும்போது கழிப்பறை வசதியற்ற பலபேரை சந்தித்ததாகவும் கூறினார் அவர். 

அக்‌ஷயிடம் பேட்டு கண்ட இதழ், “இப்படத்தின் கதை வழக்கமான கவர்ச்சி மிகுந்த காதல் கதைகளை படமாக்கும் பாலிவுட்டிற்கு இக்கதை வழக்கத்திற்கு விரோதமானது. கிராமப்புற இந்தியாவில் இன்றும் கழிப்பறையை வீட்டு வளாகத்திற்குள் கட்டிக் கொள்வது என்பது சுகாதாரமற்ற செயலாகவே தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளது. 

இரண்டு நாட்களுக்கு முன்னர் (ஆகஸ்ட் 11) வெளியான இப்படம் ஞாயிறு வரையிலும் சேர்த்து இப்படம் நாடு முழுவதும் ரூ 50 கோடியை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரைப்பட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 


Next Story